சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்...


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமிக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, கலந்து கொண்டு சாமி தரிசனம் மேலும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்கியது, சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.அந்த வகையூல் இன்று சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் ஆவணி திருவிழா  திருக்கொடியேற்றம் இன்று காலை நடைப்பெற்றது,

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் மேலும் எம்எல்ஏ தளவாய்சுந்தரம், மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இது திருவிழாவானது, பத்து நாட்கள் நடைபெறுகிறது, தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் தேர் திருவிழா நடைப்பெறுகிறது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.



Leave a Comment