ஸ்ரீமஹா கணபதி ஆலய விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி...


தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் ஸ்ரீமஹா கணபதி ஆலய விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவத்தை முன்னிட்டு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
     
தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீமஹாகணபதி ஆலயம் உள்ளது,அகஸ்திய முனிவரால் பிரதிஸ்டை செய்யப்பட்டதும் கௌதம முனிவரால் பூஜிக்கப்பட்டு வேண்டிய வரம் தரும் ஸ்ரீமஹாகணபதி ஆலயத்தில்  விநாயக சதுர்த்தி ப்ரமோத்ஸவம் கடந்த 29ம்தேதி விக்னேஸ்வர பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது,

17 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் வேதபாராயணம், திருமுறைபாராயணம்; நடைபெற்று யானை வாகனம்,சிம்ம வாகனம், பூத வாகனம்,காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு மற்றும் தேர்திருவிழா ஆகியவை நடைபெற்றது,

மேலும் அதனைத்தொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான   தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,முன்னதாக மஹாகணபதி  மலர்களால்; அலங்கரிக்கப்பட்டு சிவகணங்கள் இசைக்க வீதிஉலா புறப்பாடு நடைபெற்று காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், இளநீர், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிசேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது,

பின்னர் காவிரி ஆற்றில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது,இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தும் தீர்த்தவாரியில் பங்கேற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment