வடமழை வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்....


வடமழை ஊராட்சியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை ஊராட்சியில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற  வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் கடந்த மூன்றாம் தேதி தேவதா அனுக்ஞை உடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவடைந்து.

புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் எடுத்துச் சென்று விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேகத்தை கண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment