யானை வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால பெருமாள்... ஏசல் சேவை....


காஞ்சிபுரம் ஸ்ரீ யது குல வேணுகோபால பஜனை கோவிலில் கண்ணன் அவதார விழாவில் ஏழாம் நாளில் யானை வாகனத்தில் மீது எழுந்தருளிய வேணுகோபால பெருமாள் குலுங்கியபடி  ஏசல் சேவை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் நகரமான காஞ்சி மாநகரில் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ யதுகுல வேணுகோபால பஜனை கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ கண்ணன் அவதார நாளான கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு 12 நாட்கள் விழா எடுத்து அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கண்ணன் அவதார விழாவாக 12 நாட்கள் கொண்டாடப்பட்ட வருகிறது. அந்த வகையில்,  7ஆம் நாளான இன்று ஸ்ரீ யது குல வேணுகோபால பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர்  வேணுகோபால பெருமாள் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள், கிரீடம் அணிவித்து மலர் மாலைகளால் அலங்கரித்து யானை வாகனத்தில் எழுந்தருளினார்.

யானை வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால பெருமாள்  பாண்டவ பெருமாள் கோவில் மாடவீதியை திருவீதி உலா வந்து  ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் மூன்று முறை முன் பின்னாக சென்று ஏர்செல் சேவையானது நடைபெற்றது.  பெருமாள் குலுங்கியபடி நடைபெற்ற ஏசல் சேவையைக் காண ஏராளமான மக்கள் குவிந்து   ஏசலின் சேவையை கண்டு ரசித்தனர்.



Leave a Comment