பிரித்திங்கரா தேவிக்கு ஆவணி அமாவாசை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம்.


அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி யாகம் நடைபெற்றது.

யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பல்வேறு 108 வகையிலான மூலிகைகள் சேலைகள் யாகத்தில் இடப்பட்டன.

பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில்   கன்னியாகுமரி, சென்னை, பெரம்பலூர், மதுரை, கடலூர், தஞ்சாவூர், சேலம், திருச்சிராப்பள்ளி,     கோயம்புத்தூர்,   உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு  அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment