சனிபிரதோஷம்... நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை....


ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குருஸ்தலமான நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் நந்தி மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் வெகு விமரிணையாக நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் நேரத்தில் மழை பெய்ததால் பக்தர்கள் மழையும் பொருட்படுத்தாமல் நாமபுரீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

இன்று ஆவணி மாதத்தில் வரும் இரண்டாவது சனிபிரதோஷ விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக் கூடிய ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிவன் மற்றும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு எதிரே உள்ள நந்தி பெருமானுக்கு திரவியங்கள், மஞ்சள் அபிஷேகம், நெய் அபிஷேகம், தேன் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

மேலும் உற்சவ பிரதோஷ மூரத்தி கோவில் உள்பிரகாத ஆலயத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு தீபாதாரணை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் சூறை காற்றுடன் பெய்த கனமழையும் பொருட்படுத்தாமல்  பக்தர்கள்  கலந்து கொண்டு சிவபுராணம் பாடல்கள் பாடியும் நந்தி பெருமானையும் சிவனையும் வழிபட்டு சென்றனர்.



Leave a Comment