பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் வெள்ளித்தேரி்ல் வீதி உலா....
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகியம்மன் வெள்ளித்தேரி்ல் வீதி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் முக்கிய உபகோவிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சாயரட்சையில் அம்மனுக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ உபச்சாரம் செய்யப்பட்டு மகா அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரமும் செய்யப்பட்டது. இரவு 9 மணியளவில் வெள்ளித்தேரில் அம்மன் ஏற்றம் செய்யப்பட்டு நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நகைகள், மலர்கள், பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் கைதட்டி ஓம்சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். அதேபோல பழனி ஸ்ரீரண காளியம்மன் கோவிலிலும் தங்கரத உலா நடைபெற்றது. தேரில் ரணகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், திருக்கோயில் அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்றனர்.
Leave a Comment