ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடி தபசு திருவிழா கொடியேற்றம்...


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இன்று கொடியேற்று விழாவை முன்னிட்டுஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில்துலா லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது.

அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களாலும் கலச நீராலும் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் சர்வ அலங்கா ரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரா தனைகள் நடைபெற்றதுவிழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு,கிளி,விருஷபம்  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதி உலா நடைபெறும்.

இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை  9.55 கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. விழா நாட்களின் போது தினந்தோறும் இரவு கோயில் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.



Leave a Comment