ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழா...
சென்னை அயப்பாக்கத்தில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை அயப்பாக்கத்தில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாக விளங்கும் ஸ்ரீ தேவி செல்லியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்திருவிழா வெகு விமரிசையாக துவங்கியது.
5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாளான இன்று அம்மனக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து மஞ்சல் நிறச் சேலை அணிந்து வந்த 1000 த்திற்கும் மேற்பட்ட பெண்கள் முத்துமாரியம்மன் ஆலயத்தலிருந்து மயிலாட்டம்,ஒயிலாட்டம்,கரக்காட்டத்துடன் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. தலையில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக செல்லியம்மன் கோவில் வந்த பெண்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேருக்கு அறுஞ்சுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.
5 நாட்கள் நடைபெறும் இந்த ஆடித்திருவிழாவில் பால் குடம்,அம்மனை வர்ணித்தல்,சிற்ப்பு மகா அபிஷேக அலங்காரம்,கூழ்வார்த்தல்,கும்பம்,திருவீதி உலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
Leave a Comment