ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு....


வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ  ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளிகிழமை மற்றும் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன்,அரிசி மாவு,பால்,தயிர்,விபூதி,கரும்புசாறு சந்தனம் பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகங்களை செய்து இறுதியாக கலசாபிஷேகம் செய்தனர்.

பின்னர் மலர்மாலைகள் வில்வ இலைமாலைகள் அருகம்புல் தாமரைமலர்களால் நந்திக்கு சிறப்பு அலங்காரங்களை செய்து தட்டு ஆரத்தி கும்ப ஆரத்திகளை செய்து இறுதியாக மகாதீபாரதனைகள் நடந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர்.

பின்னர் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஜலண்டீஸ்வரி அலங்காரங்கள் செய்து திரு ஊடல் வாத்தியங்கள் முழங்கிட பக்தர்கள் புடை சூழ உட்பிரகார உலாவும் வந்தது.



Leave a Comment