திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம்...


திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் போர் (வதம் செய்யும்  நிகழ்ச்சி ) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி ஆயிரம் கண்காண பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் காமாட்சியம்மன் பேட்டை  பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்  உள்ளது இங்கு துரியோதனன் படுகள போர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக 3 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி  அன்று முதல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் ஆன்மீம நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெற்றது. இதனிடையே முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதற்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையில்  கூத்து கலைஞர்களால் பீமன் துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சியிகள் தத்துரூபமாக நடைபெற்றது

இதில் பீமன் வேடம் அணிந்தவர் பிரமாண்ட துரியோதனன் சிலையின் தொடை பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 மேலும்  மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிப்படையவும் பொதுமக்களிடையே நாணயமும் பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படவும் தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தும் இந்த மகா பாரதம் விளங்குகிறது அதை உணர்த்தும் விதமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெறுவதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.



Leave a Comment