சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா...


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடியப்படியே கோயில் கருவறைக்கு சென்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ர தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம் இந்த இரண்டு திருவிழாக்களிலும் கோவில் கருவறையில் உள்ள மூலவர் நடராஜர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய சிறப்பு மிக்க ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த மூன்றாம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒன்பதாம் நாள்  நிகழ்வாக கருதப்படும் தேரோட்டம் நேற்று நடைபெற்ற முடிவடைந்தது. நேற்று தேர் நிலையை வந்தடைந்தவுடன் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகள் கீழே இறக்கப்பட்டு கோவில் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில்  சித்சபையில் வைக்கப்பட்டனர்.

இனறு காலையில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தொடர்ந்து ஆபரண மற்றும் ரகசிய பூஜைகள் செய்யப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர் சிவகாமசுந்தரி நடனம் ஆடிய படியே கோயில் கருவறைக்கு செல்கின்றனர். இந்த காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் திருட்டுப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்தனர்.



Leave a Comment