திருத்தணி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...


திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. பெரும் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் ...

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே‌.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் புராதன காமாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று. 12 ஆண்டுககள் கடந்து விட்ட நிலையில் கோயில் அறங்காவல் குழு சார்பில் திருப்பணிகள் மேற்கொண்டு கோயில் கோபுரம்,மூலவர் சன்னதி உட்பட சன்னதிகள் புனரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்கள்,வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெறும் ‌.

விழாவில் மூன்றாம் நாளான இன்று காலை மஹா பூர்ணாஹுதி, ஹோம பூஜைகள், தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசம் மற்றும் மூலவர் சன்னதி கோபுர உச்சியில் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அப்போது கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது.

 



Leave a Comment