சுயம்பு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய 94 ம் ஆண்டு சிரசு ஊர்வலம்...


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் கோயில் 94 ஆம் ஆண்டு சிரசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சிரசு திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் இத்திருவிழாவிற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பாகவே அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருந்து  நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் கூழ் அமுது படைத்தல்,  மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊர்வலம் ஆராதனை நடந்தது. அம்மனுக்கு ஏராளமான பெண்கள்   பொங்கலிட்டும் , நேர்த்திக்கடன் செலுத்தியும் வணங்கினார்கள்.

மேலும் தமிழ் கலாச்சாரம் போற்றும் வகையில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் கச்சேரி விளையாட்டுப் போட்டிகள், வாண வேடிக்கை, நையாண்டி மேளம், கரகாட்டம் இரவு திருப்பத்தூர் மாவட்டமே போற்றும் வகையில் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது.

இதனைத் தொடர்ந்து அருள்மிகு கெங்கை அம்மன் சிரசு திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். வீடுகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

திருவிழாவை காண தேவலாபுரம்,ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணம் பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கோவிந்தாபுரம்,  துத்திப்பட்டு, ஆம்பூர் நகரம், வேலூர், திருப்பத்தூர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 



Leave a Comment