பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா...


பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பழனி கடைவீதி பின்புறம் கச்சேரி புதுத்தெருவில் ஆனிமாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை சக்திகரகம் எடுத்து வருதலுடன் துவங்கியது.  மாலையில் சரவணப்பொய்கையில் சக்திகரகம் எடுத்து வருதல் அம்மனுக்கு மகாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.  புதன்கிழமை காலை சண்முகநதிக்கு தீர்த்தம் எடுத்து வருதலும் மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ஏந்தியபடி ஓம் சக்தி கோஷத்துடன் ஊர்வலம் வந்தனர்.  இரவு 12 மணி அளவில் சக்திகரகம் சண்முகநதியில் விடப்பட்டது.  மறுபூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சிகளும், சமையல் போட்டிகளும் நடைபெறுகிறது.  வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து கிடா வெட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.  

அன்று அருள்மிகு கருப்பண சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம். சந்தனகாப்பு அலங்காரமும், அசைவவிருந்தும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் மற்றும் நிர்வாகி பி எஸ் கே எல் ராஜா , இளைஞர் நற்பணி மன்றம், மாதர் சங்கம் ஆகியன இணைந்து நடத்தி வருகிறது.



Leave a Comment