கோட்டை மாரியம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை....


தர்மபுரி நெல்லி நகர் ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது திரளான பெண்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை.

 தர்மபுரி நெல்லி நகர் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் 40-வது ஆண்டு திருவிழா கடந்த 18-ஆம்  தேதி கம்பம் நடுவலுடன் விழா துங்கியது அதனைத் தொடர்ந்து  108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் வேண்டியும் உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் மாணவ மாணவிகள் கல்வி அறிவிப்பு பெறவும் திருமண தடை நீங்கவும் கடன் பிரச்சினை நீங்கவும் செல்வம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து   பூக்களால் அர்ச்சனை செய்து தீபாரதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர் இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன விழாவிற்கான ஏற்பாடுகளை ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.



Leave a Comment