அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தெப்பல் உற்சவம்...


18 நாள் மகாபாரத போர் முடிந்து 19-ம் நாளில் திரௌபதியின் மடியில் கிருஷ்ணன் அமர கண்கொள்ளா காட்சியுடன் நடைபெற்ற தெப்பல் உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி அடுத்த காட்டேரி குப்பம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் தேவஸ்தானம் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயம், முத்து மாரியம்மன் ஆலயம், அய்யனாரப்பன் ஆலயங்களுக்கு பிரம்மோற்சவம் விழா கடந்த மாதம் 9 ஆம் தேதி வெகு விமர்சையாக துவங்கியது.

தொடர்ந்து 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவானது தொடர்ந்து காலை மாலை என தினம் தோறும் உற்சவம், விநாயகர் வீதி உலா, சாகை வார்த்தல், கும்பம் கொட்டுதல், அம்மன் வீதி உலா, என தினந்தோறும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் மகாபாரதத்தில் 18 நாள் போர் முடிந்து 19 நாளில் திரௌபதியின் மடியில் கிருஷ்ணன் அமர கண்கொள்ள காட்சியுடன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.



Leave a Comment