சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம்...


சிவகங்கை மாவட்டம் மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன் கோயில் ஆனி தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. சிவபெருமானின் கோபத்தை தணிக்க ஒரு கோடி சஷ்டி விரதம் இருந்து வலம் வந்த போது எதிரே வந்த சிவனின் கோபம் தணிந்ததால் இங்கு சொர்ணவாரீஸ்வரர்/சாந்த நாயகி அம்மன் என பெயர் பெற்ற ஸ்தலம் இது.

இங்கு ஆனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், இந்தாண்டு திருவிழா கடந்த  13ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். பத்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாலை நான்கு மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சொர்ணவாரீஸ்வரரும் சாந்தநாயகி அம்மனும் அலங்கார கோலத்தில் குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்தனர். முதலில் விநாயகர் தேர் செல்ல் அதன்பின் சொர்ணவாரீஸ்வரர் தேரை பொதுமக்கள் கூடி இழுத்தனர். நான்கு மாட வீதிகளையும் வலம் வந்த தேர் மாலை ஐந்தரை மணிக்கு நிலையை வந்தடைந்தது.

பின் தேருக்கு முன்னால் பக்தர்கள் பலரும் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 



Leave a Comment