சிந்தாமணிநாதசுவாமி திருக்கோயில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றம்...
வாசுதேவநல்லூர் பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதசுவாமி திருக்கோயில் ஆனி பெரும் திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற சிந்தாமணிநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி பெரும் திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதற்கான இந்த ஆண்டு ஆனிப்பெரும் திருவிழாவானது இன்று அதிகாலை திருக்கோவில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கொடி மரபட்டானது நான்கு ரதவீதிகளிலும் சுற்றி கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் கொடிமரத்தற்கு சந்தனம், பால், தயிர் ,பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தப்பட்டது. தொடர்ந்து மகா தீப ஆராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் அன்று திருத்தேரோட்டம் வெகு விமர்ச்சையாக நடைபெறும் வழக்கம்.
Leave a Comment