மாயூரநாதர் கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தூவங்கியது....


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூரில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்ரீ மாயூரநாத ஸ்வாமி ஸ்ரீ அஞ்சல் நாயகி அம்மன் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து கோவிலின் முன்புறம் அமைந்துள்ள கொடிமரத்திற்கு மஞ்சள், அரிசிமாவு, வாசனை திரவியங்கள், பால், சந்தனம், தேன், கும்ப நீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து மங்கள வார்த்தைகள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்தில் நெற் கதிர்கள் வைக்கப்பட்டு மஞ்சள் காப்பு கட்டப்பட்டு கொடி மரத்திற்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றன. 10 நாட்கள் நடைபெறும் ஆனி பெரும் திருவிழாவின் போது தினந்தோறும் சுவாமி,அம்பாள் வீதி உலா நடைபெறும்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.



Leave a Comment