ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்


புதுச்சேரி ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த வாழப்பட்டாம் பாளையம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை அன்று ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம்,  முதல் கால யாக பூஜை ஹோமம் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று காலை நான்காவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஸ்ரீ பேட்டை வாழி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவினை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் வாழப்பட்டாம்பாளையம் கிராமவாசிகள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment