25 பெருமாள் கோவில்களில் இருந்து கருட வாகன புறப்பாடு...


தஞ்சையில் உள்ள 25 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி  பாண்டுரங்கா பஜனை பாடல்கள். கோலாட்டத்துடன் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தன ஏராளமான மக்கள் கருடசேவையை வழிப்பட்டனர்.
 
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக நடைபெற்றது.

90-ம் ஆண்டாக நடைபெறுகிற இந்த விழா  28-ம் தேதி வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து இன்று திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

இதில், நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், பள்ளிய அக்ரஹாரம் கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

 



Leave a Comment