உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்...


பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் 25அடி உயர மாம்பழ தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மாம்பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உடையபிராட்டி அம்மன் கோவிலில் மாம்பழ தேரோட்டம்  விமர்சையாக நடைபெற்றது.இந்த தேரோட்டத்தில் 25 அடி உயர தேரானது மா, பலா,வாழை, நுங்கு, எழுமிச்சை பழம், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களால் தேரானது அலங்கரிப்பட்டு  அம்மன் தேரில் வீற்றிருக்க் புறப்பட்ட தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது.தேர் வரும் வழியெங்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தேரின் மீது மாம்பழங்களை சூறைவீசினர்.

சூறை வீசப்பட்ட  மாம்பழங்களை  பக்தியுடன் பிடித்து தங்களது இல்லங்களுக்கு எடுத்துச்சென்றனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் உடையபிராட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.இவ்வாறாக முக்கிய ‌வீதிகள்‌ வழியாக மாம்பழ சூறையுடன் சென்ற தேரானது தேர்முட்டி வீதியில் நிலைக்கு வந்தடைந்தது.

இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து  இழுத்து சென்றனர். பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



Leave a Comment