காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா...
வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி ஸமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழா வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது..
முன்னதாக கோவிலில் இருக்கும் நந்தி பகவானுக்கு அரிசி மாவு கதம்பொடி ,மஞ்சள், தயிர், இளநீர் தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய வாசனை திரவியகளோடு சிறப்பான முறையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப மலர்களாலும் அருகம்புல் அலங்காரம் செய்து மஹா தீபாரதனையை காண்பித்தனர்
தொடர்ந்து நடைபெற்ற பிரதோஷ விழாவில் வாலாஜாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்..
Leave a Comment