மயிலாடுதுறை மாயூரநாதர் திருவீதியுலா...


மயிலாடுதுறை மாயூரநாதர்  திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் பூதம், பூதகி வாகனங்களிலும், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் வெள்ளிரதத்திலும் திருவீதியுலா.  திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது.

4 ஆம் திருநாளான இன்று ஆலயத்தின் கொடிமரம் முன்பு பூத வாகனத்தில் ஸ்ரீ மாயூரநாரும், பூதகி வாகனத்தில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மனும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரதத்திலும் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய  சுவாமிகள் முன்னிலையில் 16 வகையான சோடச தீபாரதனை நடைபெற்றது.

தேவார பதிகங்கள் பாடி மகாதீபாரதனை செய்யப்பட்டு யாசாலை பூஜைகள் பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பூதம், பூதகி, வெள்ளி ரதத்தில்  பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.



Leave a Comment