குடியாத்தம் கெங்கை அம்மன் சிரசு திருவிழா...
குடியாத்தம் நகரில் கோலாகலமாக நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழா. குடியாத்தம் நகரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
இந்த ஆண்டு சிரசு ஊர்வலம் அதிகாலையில் முன்கூட்டியே நடைபெற்றதால் பக்தர்கள் ஏமாற்றம். வழக்கமாக காலை 6:00 மணிக்கு தரணம் வேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு 10 மணியளவில் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சிரசு வந்தடையும். ஆனால் இந்த முறை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எட்டு முப்பது மணிக்கு எல்லாம் கோவிலுக்குள் சென்றதால் வெளி மாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து சரசு விழாவை காண வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆண்டு தோறும் வைகாசி 1- ம் தேதி நடைபெறும் புகழ்பெற்ற வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. நகர் முழுவதும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தியாலம்மன் ஆலயத்தில் இருந்து அமம்ன் சிரசு நகரின் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் ஆலத்தில் உள்ள அம்மன் உடலில் பொறுதப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமம்ன் சிரசு ஊர்வலத்தில் போது பக்தர்கள் சாலை நெடுங்கிலும் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். சிரசு திருவிழாவை காண தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் குடியாத்தம் நகரமே விழாக்கோலமாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
Leave a Comment