செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம்...
புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தேரோட்டம். புதிதாக செய்த தேரை கோவிலுக்கு அர்ப்பணித்த முதல்வர் ரங்கசாமி தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அருள்மிகு செடிலாடி செங்கழுநீர் மாரியம்மன் ஆலயத்தின் 110 ஆம் ஆண்டு மகோற்ச்சவ விழா கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம் யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி புதியதாக செய்யப்பட்ட திருத்தேரை கோவிலுக்கு அர்ப்பணித்து முதலாம் ஆண்டு தேரோட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்கள்.
கோவில் பிரகாரத்தில் இருந்து புறப்பட்ட திரு தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தது. இந்த தேரோட்டத்தில் அரியாங்குப்பம் மட்டுமின்றி சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்று சென்றனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Leave a Comment