வெம்பக்கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்....
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெம்பக்கோட்டையில் அருள்மிகு மாரியம்மன் கோவில் அஸ்வந்த்ன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 1001 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
அதற்கு முன்ன அஸ்வந்த் என மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம யாக பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஹோமத்தில் வைத்திருந்த கும்பங்ளை வைத்து கோவிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அபிஷேகத்தை தொடர்ந்து கும்ப அபிஷேக தீர்த்தம் மற்றும் அம்மனுக்கு செய்த அபிஷேகத் திட்டத்தை கொண்டு பக்தர்களுக்கு தீர்த்தங்கள் அளிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரகுராமன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ்ஆர். ராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அம்மன் பக்தி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Leave a Comment