திருப்பதியில் தங்க தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி...


திருப்பதி ஏழுமலையான் கோயில்  வருடாந்திர   வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை  மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன்  தங்க தேரில் திருமாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்ல வலம் வந்து அருள் பாலித்தார்.

தங்க ரதம்  வீதி உலாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்த கோவிந்தா மனம் உருகி வேண்டி கற்பூர ஆரத்தி எடுத்து தங்க தேரில் வலம் வந்த சுவாமியை வழிபாடு செய்தனர். தங்க தேரில்  தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவி அருள் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஏழுமலையானின்  அருள் கிடைக்கும்  என்று பக்தர்கள் நம்பிக்கை.

இந்நிகழ்ச்சியில் இ.ஓ. ஏ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ. லோகநாதம், விஜிஓ நந்த கிஷோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று மதியம்  கோயிலுக்கு பின்புறம் உள்ள வசந்த மண்டபத்தில் 2 மணிக்கு பால்,தயிர், இளநீர், மஞ்சள், உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.



Leave a Comment