காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்...


காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜகுபேரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவபெருமானிடமிருந்து செல்வத்தின் அதிபதியாக வரம் பெற்றவர் ஸ்ரீராஜகுபேரர். செல்வங்களை வாரி வழங்கக்கூடிய சக்தி வாய்ந்த இவருக்கு காஞ்சிபுரம் குபேரப்பட்டிணத்தில் புதியதாக கோயில் கட்டப்பட்டிருந்தது.இக்கோவிலில்  ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும்,இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி-3 யாககுண்டங்கள்,151 கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சென்னை வடபழனி கோயில் அர்ச்சகர் சௌந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்கள். யாகசாலை பூஜைகள் நேற்று  மாலையில் தொடங்கியது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள்  தலைமையிலான விழா குழுவினர் செய்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்தமையால் விழா குழுவினரால் ஏற்பாட்டில் அன்னதானங்கள் வழங்கப்பட்டு சுற்று வட்டார ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ குபேரர் அருள் பெற்று அன்னதானம் பெற்று சென்றனர்.



Leave a Comment