குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்....


குன்றத்தூர் திருநாகேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா கோலாகலம்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் சென்னை அடுத்த  குன்றத்தூரில் கட்டப்பட்ட  நாகேச்சர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நவகிரக ஸ்தங்களில் ராகு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்றார். இந்த பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று திருத்தேர் விழா நடந்தது. காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.

தேர் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேரின் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நிலையத்தில் புறப்பட்ட தேரை  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக பவனி சென்றது. தேரின் நான்கு சக்கரமும் நன்கொடையாளர்கள் மூலம் இரும்பு சக்கரமாக அன்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தேர் இயக்குவதற்கு எளிதாக இருந்தது.

தேர் சென்ற வழிநெடுக்கிலும் அன்னதானம், மோர், குளர்பானம் வழக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க குன்றத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.



Leave a Comment