தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்... ஏப்ரல் 20-ல் தேர்...
தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் இம்மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது.கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகனங்கள் இசைக்க சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களுடன், ஒதுவார்கள் திருமுறை ஒத நந்தி மண்டபம் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு அலங்கார தீபம் காட்டப்பட்டன.
ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் இந்த மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. 22ம் தேதி தீர்த்தவாரி நடைப்பெறுகிறது. 23ம் தேதி சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
Leave a Comment