பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ஒற்றை தேங்காய்....
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய விசேஷ நாளான வள்ளி முருகன் திருக்கல்யாண உற்சவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஒன்றை ரூபாய் 62,000 க்கு ஏலம் எடுத்த வெளியூர் பக்தர்.
கடந்த தைப்பூசம் மறுநாள் நடைபெற்ற தெய்வயானை முருகன் திருமண வைபத்தில் ஒரு தேங்காய் 36 ஆயிரம் விலை போன நிலையில் இந்தப் பங்குனி உத்திர திருநாளில் ஒரே தேங்காய் 62,000 க்கு ஏலம் எடுக்கப்பட்ட து.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகரில் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் போடி நாயக்கனூரை ஆண்ட ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்டு தற்போது இந்து அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இங்கு கடந்த வாரம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் செய்யப்பட்டு நாளை பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பள்ளிக்கும் முருக பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியின்முக்கிய திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூபாய் ஐந்தாயிரத்தில் தொடங்கிய தேங்காய் ஏலம் நிறைவாக ரூபாய் 62 ஆயிரம் வரை கேட்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் கவிதா வள்ளியம்மை தம்பதியினர் இந்த ஒற்றைத் தேங்காயை ரூபாய் 62 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். கடந்த தைப்பூசம் மறுநாள் நடைபெற்ற தேவயானி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் ஏலம் விடப்பட்ட தேங்காய் ரூபாய் 32,000 க்கு விலை போனது .
இன்று பங்குனி உத்திரம் முதல் நாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் முருகப்பெருமான் வள்ளி திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஒன்று இரண்டு மடங்கு அதிகம் விலை கேட்கப்பட்டு ரூபாய் 62,000 க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் இன்று சுவாமி முன்பு உடைக்கப்பட்டதில் தேங்காய் முற்றிலும் அழுகாமல் காய்ந்து நிலையில் ஓடுடன் ஒட்டிக்கொண்டு என்பது குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலின் சிவாச்சாரியார் அந்த தேங்காயை பக்தர்களுக்கு காண்பித்த இப்பொழுது அனைவரும் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்
Leave a Comment