ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக்கொள்ளை....


ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக்கொள்ளை....

மயிலாடுதுறை அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் மயானக் கொள்ளை திருவிழா.

வீதியுலாவாக மயனாத்திற்கு சென்ற சுவாமிக்கு தீபாரதனை எடுத்து கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கொள்ளையிடும் மயானக்கொல்லை திருவிழா நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து கிழங்கை பெற்று சென்றனர்.
 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவில் பரம்பரை அறங்காவலர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்காளம்மன் சுவாமி, வீரபத்திரர் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் மாவிளக்கிட்டு அமபாளுக்கம் வீரபத்திரருக்கும் வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சுவாமிகள்  (சுடுகாடு) மயானத்தை  அடைந்தது.

அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகளை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழங்கை கொள்ளையிட்டு பக்தர்களுக்கு வழங்கினர்.

இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று ஆலயத்தில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



Leave a Comment