சிவராத்திரி முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் அருகே பிரகன் நாட்டையாஞ்சலி நிகழ்ச்சி...
சிவராத்திரி முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் அருகே பிரகன் நாட்டையாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
சிவராத்திரி விழா நேற்று சிவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவிலில் நேற்று அரசு விழாவாக பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஆறு நாட்களுக்கு பிரகன் நாட்டியஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் நிகழ்வாக தஞ்சை பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இருந்து வந்த நாட்டிய கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை அரங்கேற்றி இசை அஞ்சலி செலுத்தினர். இதில் பெங்களூர் கௌசல்யா நிவாஸ் அணியினர் சிவராத்திரி உருவான வரலாறு முழுவதும் பெண்கள் ஆண்கள் வேடமிட்டும் நாட்டியநாடகத்தை நிகழ்த்தினர்.
மும்பை சேர்ந்த நடண கலைஞர்கள் தொடிவாளா நடணம் ஆடி அசத்தினர. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
Leave a Comment