மாம்பழம் பெற சிவனை சுற்றி வந்த விநாயகர்... மக்களை கவர்ந்த உற்சவமூர்த்திகள்...


காசிக்கு வீசம் பெற்ற திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் மற்றும் ஒதயன் பட்டு காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கராபரணி ஆற்றங்கரையில் காலை முதலே குவிய தொடங்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த முன்னோர்களுக்கு காய்கறிகள் பழங்கள் உள்ளிட்வைகளை கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவமூர்த்திகள் சங்கராபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தினர்.

மேலும் மிகவும் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் மற்றும் கங்கைவராக நதீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலித்தனர். மாசி மக தீர்த்தவாரியில் எழுந்தருளிய முருகன் உலகத்தை சுற்றி வருவது போன்று மயில் வாகனத்திலும் விநாயகர் சிவனை சுற்றி வருவது போன்றும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் கூடியுள்ளதால் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக உயர் கோபுரங்கள் அமைத்து தொலைநோக்கி வைத்தும், ட்ரோன் கேமிராக்காள் பறக்கவிட்டும் 200 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்கானிப்பு மற்றும் பாதுகாப்பு  பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.



Leave a Comment