33 அடி ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா...
ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற 33 அடி ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் சாமி வந்து ஆடிய பக்தர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் உள்ள பாலாற்றங்கரையோ ரம் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரிய முழு உருவ குழந்தை முனீசுவரர் ஆலயத்தில் இன்று 11 மணிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது,
கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று மங்கள வாத்தியத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் பூஜை தொடங்கப்பட்டு தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுபதி, வாஸ்து சாந்தி பிரவேச பலி அங்குரார்பணம், நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேதங்கள், மற்றும் மந்திரங்கள் ஓத குழந்தை மூலவர் முனீசுவரர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது, அப்போது பக்தர்கள் மீது சாமி வந்து ஆடினர்
பின்னர் புனித நீர் பக்தர்கள் தெளிக்கக்பட்டு அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் சுற்றுவட்டார 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Leave a Comment