திருமலை தேவஸ்தான நாள்காட்டி வேண்டுமா?


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2018-ஆம் ஆண்டிற்கான புதிய நாள்காட்டியை பெற சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள்காட்டிகளை கூரியர் மூலம் பெற தேவஸ்தானம் பக்தர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2018 ம் ஆண்டிற்கான புதிய நாள்காட்டி மற்றும் கையேடுகளை அச்சிட்டு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கையால் வெளியிட்டது. தற்போது இந்த நாள்காட்டி மற்றும் கையேடுகள் திருமலை, திருப்பதி மற்றும் நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் தொடர்பு மையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும்.
இந்நிலையில் தற்போது தங்களில் சொந்த பயன்பாட்டிற்காக நாள்காட்டி மற்றும் கையேடு பெற விரும்பும் பக்தர்கள் கூரியர் மூலம் பெற்றுக் கொள்ளும் புதிய முறையை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
அதனால் ரூ. 90, ரூ. 15, ரூ. 10 விலையில் உள்ள நாள்காட்டி மற்றும் ரூ.120, ரூ.90 விலையில் உள்ள கையேடுகளை பெற விரும்பும் பக்தர்கள் அதற்குண்டான கட்டணத்தை நிர்வாக அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து தங்கள் முகவரியை இணைத்து அதை எ.இ.ஓ. பிரிண்டிங் பிரஸ், திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வரைவோலை கிடைக்க பெற்றவுடன் சம்பந்தட்டவர்களுக்கு பார்சல் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். கூரியருக்கு உண்டான கட்டணத்தை அளித்து பக்தர்கள் அதனைப் பெற்று கொள்ளலாம்.



Leave a Comment