திருப்போரூர் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா... தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்...


திருப்போரூர் முருகர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா தங்க கொடி மரத்தில் கொடியேற்றி பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் துவங்கியது. மாசி மாதம் முருக பெருமானுக்கு பிரம்மோற்சவ திருவிழா நடைப்பெருவது வழக்கம்.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் தங்க கொடி மரத்தில் பக்தர்களின் அரோகரா அரோகரா என்ற கோஷம் வின்னை முட்ட கொடியேற்றம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வானை முருகப் பெருமானை வழிபட்டனர்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21ம் புதன்கிழமையும், வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும் நடைபெறவுள்ளது.



Leave a Comment