மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...


ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற விஷேச நாட்களில் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங் கியது. சர்க்கார்பதியில் இருந்து  பிரத்யோகமாக சேகரிக்கப்பட்ட 85 அடி உயரமான  மூங்கில்  சேத்துமடைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்யப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து மாசாணியம்ம கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை  வருகிற 22ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும்.



Leave a Comment