முன்னோர்களின் ஆசி கிடைக்க தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்.....


தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

இதனால் கிடைக்கும் பலன்கள் :

தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்... நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

தானம் கட்டாயம்!

தை அமாவாசை அன்று கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் போன்ற பொருள்களை தானம் கொடுக்கலாம். இதன் மூலம் முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதோடு பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டியதும் கட்டாயம். அவரவர் நிலைமைக்கு ஏற்ப தர்ப்பணம் செய்யலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியது!

தர்ப்பணம் கொடுப்பவர்கள் தனது கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறை முன்னோரின் பெயர்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து முடித்து வீட்டிற்கு வந்ததும் சுத்தம் செய்த முன்னோரின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று துளசிமாலை போட வேண்டும். படத்திற்கு குங்குமம், சந்தனம் பூச வேண்டும்.

வீட்டில் இருக்கும் முன்னோர் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களைப் படைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரைக்கும் வீட்டில் தெய்வ வழிபாடு பூஜைகளை ஒத்தி வைக்க வேண்டும். தர்ப்பணம் முடிந்த பிறகு தான் தினசரி வழிபாடுகளை செய்ய வேண்டும்.



Leave a Comment