அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்....


பல நூறு ஆண்டுகள் பழமை வாழ்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது....சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் நான்கு மாட வீதியில் கல்யாணகிணறு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் புனரமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு பொது மக்களின் பங்களிப்போடு 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் புனரமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா இன்று காலை நான்காம் கால யாகபூஜை நடைபெற்று பூர்ணாஹூதி செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக மேல வாத்தியத்துடன் கொண்டு வரப்பட்டு கோபுர உச்சியில் மகா கும்பாபிஷேகம் ஆனது வெகு விமர்சையாக நடைபெற்றது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை வழிபட்டனர்.



Leave a Comment