கன்னி ராசிக்கு பிப்ரவரி மாதம் எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்....
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் கேது, சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்:
04-02-2024 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2024 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2024 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.
பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.
கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
அஸ்தம்:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
Leave a Comment