சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கொடி ஏற்றம்...


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் காலை 7 மணி அளவில் நடராஜ பெருமானுக்கு பள்ளி அறையிலிருந்து நடராஜப் பெருமானின் பாதம் ஊர்வலமாக புறப்பட்டு நடராஜ பெருமானின் கனகசபையில் வந்து அடைந்தவுடன் பூஜைகள் நடைபெற்றது.

பின்பு குடியரசு தினமான இன்று நமது இந்திய தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சதர்கள் சிவராம தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக நடராஜப் பெருமானின் காலடியில் வைத்து பூஜித்து பின்பு ஊர்வலமாக புறப்பட்டு மேல தாளங்கள் வாதியங்கள் முழங்க நமது இந்திய தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு சென்று 142 அடி உயரமுள்ள கீழ கோபுரத்தில் கொடி ஏற்றினார்கள்.

பின்னர் சிதம்பர நடராஜர் கோவில் தீட்சதர்கள்  இந்திய தேசிய கொடிக்கு மரியாதை தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் வீட்டு விழாக்கள் போல் குடியரசு தின விழாவை கொண்டாடினார்கள்



Leave a Comment