நெல் வேலி திருவிளையாடல்... நெல்லையப்பர் கோயிலில் தத்ரூபமாக நடைபெற்ற நிகழ்வு...
திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்த நெல் வேலி திருவிளையாடல் திருவிழா நெல்லை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் தைப்பூச திருவிழாவில் நான்காம் திருநாளில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருநெல்வேலி என பெயர் காரணம் வர நடைபெற்ற சுவாமி நெல்லையப்பர் நெல்லுக்கு வெளியிட்ட திருவிளையாடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மகா மண்டபத்தில் எழுந்தருளினர் அதனை தொடர்ந்து வேத பட்டர் சுவாமிக்கு அமுது படைக்க நெல்லை நகர் வீதிகளில் நெல்மணிகள் யாசகம் பெற்று கோவில் பிரகாரத்தில் காய வைக்கும் நிகழ்வு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து வேதப்பட்டர் குளிக்க சென்ற போது மழை பெய்யும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் அருளால் வேதபட்ட காய வைத்த நெல் இருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் இருந்தது போன்ற திருவிளையாடல் நிகழ்வும் தத்ரூபமாக கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குளிக்கச் சென்ற வேதபட்டார் மழை பெய்து நெல் நனையாமல் இருந்ததை கண்டு இன்புற்று பாண்டிய மன்னரிடம் தகவலை தெரிவித்து பாண்டிய மன்னருடன் சேர்ந்து வந்து பார்த்தபோது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த திருவிளையாடல் நிகழ்ச்சிகளை கோவில் ஓதுவார் பாடலாக பாடி தத்ரூபமாக விளக்கினார்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று மாலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் விநாயகர் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் பஞ்சவர்ண வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.
Leave a Comment