அண்ணாமலையார், பிருங்கி மகரிஷிக்கு காட்சியளித்து கிரிவலம்...
பராசக்தியம்மனுடன் ஊடல் கொண்ட அண்ணாமலையார் பிருங்பி மகரிஷிக்கு காட்சியளித்து கிரிவலம்-ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
தை மாதம் 2ஆம் நாளான நேற்று மாலை திருவண்ணாமலை, திருவூடல் தெருவில் அண்ணாமலையார், பராசக்தியம்மன் ஆகியோர் ஊடல் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த திருவூடல் நிகழ்வில் அண்ணாமலையாhருடன் ஊடல் கொண்ட பராசக்தியம்மன் தனியாக அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று விடுவார். ஆண்ணாமலையார் மட்டும் தனியாக குமரக்கோயிலுக்கு சென்று இரவு தங்கி விட்டு இன்று காலையில் பிருங்கி மகரிஷி முக்தியடைவதற்க்கு அவருக்கு அண்ணாலையார் நேரில் காட்சியளித்து கிரிவலம் வருவார். கிரிவலம் சென்ற அண்ணாமலையாரை பக்தர்கள் வழிநெடுக தீபஆரதனைகள் செய்து வழிபட்டனர்.
Leave a Comment