திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்து டன் மலர்களால் அலங்காரம்...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பத்து டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில். மலர் அலங்கார வேலைபாடுகளை கண்டு ஒரே நேரத்தில் அகல திறக்கும் பக்தர்களின் வாய் மற்றும் கண்கள்.
நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் நாளை அதிகாலை ஒரு மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் முழுவதையும் தேவஸ்தான நிர்வாகம் சுமார் 10 டன் எடையுள்ள இந்திய மலர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்கள் ஆகியவற்றால் கண் கவரும் வகையில் அலங்கரித்துள்ளது.
கோவில் முன் வாசல் துவங்கி, தங்க கொடிமரம்,பலிபீடம், சொர்க்கவாசல், துணை சன்னதிகள்,கோவிலில் உள்ள பல்வேறு மண்டபங்கள் ஆகிய அனைத்து பகுதிகளும் மலர் அலங்காரம் கண்டு பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.
சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார வேலைபாடுகளை பார்த்து மெய்மறந்து செல்கின்றனர். பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார மற்றும் மின்சார சரவிளக்கு அலங்கார வேலைப்பாடுகளை பார்த்து ரசிக்கும் பக்தர்களின் கண்களும் வாயும் ஒரே நேரத்தில் அகல திறக்கின்றன.
Leave a Comment