திருநள்ளாறு சனி பெயர்ச்சி முன்னேற்பாடுகள்... குருமகா சந்நிதானம் நேரில் ஆய்வு...
திருநள்ளாறு சனி பெயர்ச்சி முன்னேற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் நேரில் ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் 20ம் தேதி சனி பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் செய்த ஆதீனம் பின்னர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து கோவிலில் செய்யப்பட்டு வரும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் மற்றும் கோவில் உள்துறை செயல்பாடுகள் குறித்து ஆதின கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Leave a Comment