ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கால பைரவாஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு...


4இரண்டு பைரவர்களைக் கொண்ட இரண்டாவது குருஸ்தலம் என்று பக்தர்களால் வழங்கப்படும் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கால பைரவாஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு. பைரவ உற்சவ மூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவில் இரண்டாவது குருஸ்தலம் எனவும் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருக்கோவிலில் மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக ஆதி கால பைரவர் மற்றும் காசி கால பைரவர் என இரண்டு பைரவர்கள் அருள்பாளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பிரச்சித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த திருக்கோவிலில், மகா கால பைரவாஷ்டமியை முன்னிட்டு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு, பால், பன்னீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் பைரவர் காட்சி அளித்தார். வில்வ சகஸரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.

பின்னர் தேர் பவணியில் பைரவ உற்சவ மூர்த்தி எழுந்தருள பக்தர்கள் பக்திபரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வண்ண விளக்குகள் மிளிர பட்டாசுகள் வெடிக்க விமர்சையாக நடைபெற்ற இந்த தேர் பவனி காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் தேர் கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் வளம் வந்து நிலை நின்றது. மேலும் இந்த தேர் பவணியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு  ஆராதனை நடைபெற்றது.

மேலும் இந்த தேர் பவனி நிகழ்ச்சியில் தெரு நெடுகிலும் நின்ற ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு மாலை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பைரவருக்கு உரிய நிறமான சிவப்பு நிறக் கயிறும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.



Leave a Comment