வசவப்பபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் சம்ப்ரோட்ஷணம்
பாளையங்கோட்டை அருகே வசவப்பபுரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் சம்ப்ரோட்ஷணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பழமைவாய்ந்த பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் பல லட்சம் மதிப்பில் விமானம் புதுப்பித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மகாகும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தேவதா பிரார்த்தனை, அனுக்கை, கோ பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், திக்பலி, அங்குரார்ப்பணம், ஆச்சார்ய, எஜமான வர்ணம், யாகசாலை பிரவேசம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தாமிரவருணியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், த்வார வேதிகா பூஜைகள், வேதபிரபந்த கோஷம், ஹோமம் நடைபெற்றது. பூர்ணாஹுதி, திருவாரதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வாக நவம்பர் 9 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மகா சம்ப்ரோட்ஷணம் நடைபெற்றது. நண்பகலில் திருக்கல்யாண உற்சவம், மந்திர புஷ்பம், மாலையில் கருடசேவை உற்சவம் ஆகியன நடைபெற்றன.
Leave a Comment